முகப்பு தலைமைச் செய்திகள்

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

266

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம் கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான சீமான் அவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் 26-01-2021 அன்று மாலை 4 மணியளவில் சேலம், கே.எம்.பி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Exit mobile version