கடையம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் -ஆலங்குளம் தொகுதி

117

08/11/2020 அன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் கடையம் தெற்கு ஒன்றியத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் கிராமத்தில் தொகுதி தலைவர் ஆ.முத்துராஜ் ஈசாக் அவர்களின் தலைமையில் கருத்தப்பிள்ளையூரை சார்ந்த அண்ணன் துரை அவர்களின் முன்னெடுப்பில் கடையம் ஒன்றிய அளவிலான மாபெரும் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வின் இறுதியில் தொகுதி இணைச்செயலாளர் அண்ணன் சிவசங்கரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்

இந்நிகழ்வில் அனைத்து நிலை தொகுதி பொறுப்பாளர்கள், கடையம் வடக்கு மற்றும் தெற்கு உறவுகள் உட்பட கருத்தப்பிள்ளையூர் கிளை உறவுகள் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.