முகப்பு தலைமைச் செய்திகள்

சுற்றறிக்கை: தி.நகர், சைதாப்பேட்டை, எழும்பூர் மற்றும் துறைமுகம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

89

க.எண்: 2019120346
நாள்: 10.12.2019

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தி.நகர், சைதாப்பேட்டை, எழும்பூர் மற்றும் துறைமுகம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தி.நகர், சைதாப்பேட்டை, எழும்பூர் மற்றும் துறைமுகம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு நாளை 11-12-2019 (புதன்கிழமை) அன்று நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
04-12-2019
புதன்
மாலை 04 மணியளவில் தி.நகர், சைதாப்பேட்டை, எழும்பூர் மற்றும் துறைமுகம் தொகுதிகள் கட்சித் தலைமை அலுவலகம்,
இராவணன் குடில், எண். 8, செந்தில்நகர், சின்னபோரூர்,
சென்னை – 600116

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

Exit mobile version