விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம்  (12-10-2019) 

187

செய்திக்குறிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம்  (12-10-2019) | நாம் தமிழர் கட்சி

அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நமது கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கு.கந்தசாமி அவர்களை ஆதரித்து  நேற்று 11-10-2019 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் விக்கிரவாண்டி கடை வீதியிலும் ௦6 மணியளவில் பனையபுரம் பேருந்து நிறுத்தம் அருகிலும்,
இரவு ௦8 மணியளவில் இராதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகிலும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.

07-10-2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் - சீமான் பரப்புரை Vikiravandi

07-10-2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் - சீமான் பரப்புரை Vikiravandi

07-10-2019 பனையபுரம் | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் - சீமான் பரப்புரை

இன்று 12-10-2019 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நேமூர் பகுதியிலும், ௦6 மணியளவில் கஞ்சனூர் பகுதியிலும், இரவு ௦8 மணியளவில் சிந்தாமணி பகுதியிலும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

எனவே விக்கிரவாண்டி தொகுதிக் களப்பணிகளில் இணைந்து செயற்பட வேண்டிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமாயின் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.