முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: கே.கே.நகர் ம.மணிகண்டன் மீண்டும் கட்சியில் சேர்ப்பு

100

தலைமை அறிவிப்பு:

கடந்த 31-03-2019 அன்று, கட்சிப் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த ம.மணிகண்டன் அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக்கொள்ளப்படுகிறார். அவர் ஏற்கனவே வகித்த கே.கே.நகர் பகுதிச் செயலாளர் பொறுப்பிலேயே மீண்டும் களப்பணியைத் தொடர்வார்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Exit mobile version