முகப்பு கட்சி செய்திகள்

காஞ்சிபுரம், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

109

செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்,
மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல்
16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

இரண்டாம் நாளான நேற்று 26-03-2019 மாலை 05 மணியளவில், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் த.சிவரஞ்சனி, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தி.மோகனசுந்தரி ஆகியோரை ஆதரித்து திருக்கழுகுன்றம் பொதுக்கூட்டத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்
 
இரவு 08 மணியளவில், திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈரா.மகேந்திரன் அவர்களை ஆதரித்து ஆலந்தூர் பொதுக்கூட்டத்தில் (நீதிமன்றம் எதிரில்), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்

Exit mobile version