இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – சீமான் கண்டனவுரை

946

*இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – சீமான் கண்டனவுரை* | நாம் தமிழர் கட்சி https://goo.gl/BAcbvw

இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் இன்று 17-03-2018 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு நடைபெற்றது.
17-03-2018 தமிழ் இசுலாமியர்கள் மீது இனவெறி தாக்குதல்: இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் - சீமான்
இப்போராட்டத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப் பேரியக்கம், மருது மக்கள் இயக்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்றன.
17-03-2018  இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் - சீமான் கண்டனவுரை | Seeman - SriLankan Embassy
தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கம் தலைவர் முத்துப்பாண்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டன முழக்கமிட்டனர்.
17-03-2018 இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் - சீமான் | தி.வேல்முருகன் | மு.களஞ்சியம் | அ.வினோத்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084