முகப்பு கட்சி செய்திகள்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பரப்புரை: நாள் – 02 | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்

117

செய்தி: ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பரப்புரை: நாள் – 02 | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

02-12-2017 ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பரப்புரை: வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

இரண்டாம் நாளான இன்று 02-12-2017 (சனிக்கிழமை) காலை 08 மணி முதல் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் 43வது வட்டம், காசிமேடு, YMCA குப்பம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து மாலை 06 மணிக்கு அன்புத்தென்னரசன் தலைமையில் 43வது வட்டம், C.G காலணி, காசிமேடு சாலை சந்திப்பு (signal) அருகில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

இறுதியாக கலைக்கோட்டுதயம் அவர்கள் ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சி செயல்படுத்தவிருக்கும் திட்டங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Exit mobile version