முகப்பு தலைமைச் செய்திகள்

தியாகத்தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம்

138

26-09-2017 தியாகத்தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன், உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன். தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய தியாகத்தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (26-09-2017) செவ்வாய்க்கிழமை காலை 12 மணிக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

26-09-2017 தியாகத்தீபம் திலீபன் நினைவுநாள் - வீரவணக்கம் | நாம் தமிழர் கட்சி - சீமான்

இந்நிகழ்வில் தியாகத்தீபம் திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சுடரேற்றி மலர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தினார்.
செய்தியாளர் சந்திப்பு:
26-09-2017 சீமான் - செய்தியாளர் சந்திப்பு | தியாகத்தீபம் திலீபன் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் - சென்னை


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Exit mobile version