சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

103

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-சீமான் கண்டனவுரை | வள்ளுவர்கோட்டம் (22.08.2017) | நாம் தமிழர் கட்சி – கலை, இலக்கிய பண்பாட்டுப் பாசறை

தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையை மீண்டும் மெரீனா கடற்கரையிலேயே நிறுவ வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கிய பண்பாட்டுப் பாசறை சார்பாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் இன்று  22-08-2017 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையேற்று கண்டனவுரையாற்றினார்.

அதுசமயம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த கே.ராஜன், இயக்குநர் சேரன் மற்றும்  நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரசிகர் மன்றப் பெருமக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனவுரையாற்றினார்கள்.

நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளிர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர், இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில்  நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

நடிகர் திலகத்தை வெறுமனே நடிகர் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிப் பார்க்க இயலாது. ஐம்பதாயிரம் ஆண்டுகள் தொன்மை பெருமைமிக்கத் தமிழர் என்ற தேசிய இனத்தின் கலைமுகத்தை அடையாளப்படுத்தும் பெருங்கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார். தனது அசாத்திய நடிப்புத் திறனாலும், வியக்கவைக்கும் வசன உச்சரிப்பினாலும் தலைமுறை கடந்தும் எல்லோரது மனதையும் கொள்ளைகொண்டு உலகத்தமிழர்களின் உள்ளத்தில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும் அந்த மாபெரும் கலைஞனின் புகழையும், பெருமையையும் போற்ற வேண்டியது தமிழ்த்தேசிய இன மக்களின் தலையாயக் கடமையாகும். மொழியே ஓர் இனத்தின் உயிர்; அம்மொழிக்கு வளமும், நலமும் சேர்ப்பவை அம்மொழி சார்ந்த கலையும், இலக்கியங்களுமாகும். ஆகவே, கலையையும், இலக்கியங்களையும் தரிசிக்கக் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பு:
22-08-2017 சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரீனாவில் நிறுவ ஆர்ப்பாட்டம் | Seeman Pressmeet Sivaji

22-08-2017 சீமான் செய்தியாளர் சந்திப்பு - சிவாஜிகணேசன் சிலை | Seeman Pressmeet PuthiyaThalaimurai TV

22-08-2017 சீமான் செய்தியாளர் சந்திப்பு - மெரினாவில் சிவாஜிகணேசன் சிலை | Seeman Pressmeet Thanthi TV

22-08-2017 சீமான் செய்தியாளர் சந்திப்பு - நீட் தேர்வு | Seeman Pressmeet News7 TV | NEET Exam


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி