முகப்பு தலைமைச் செய்திகள்

தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்! தீர்வுகளும்! பொதுக்கூட்டம் – அஸ்தம்பட்டி (சேலம் மாவட்டம்)

305

அறிவிப்பு: தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்! தீர்வுகளும்! – மாபெரும் பொதுக்கூட்டம் – சேலம் | நாம் தமிழர் கட்சி

தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்! தீர்வுகளும்! குறித்து நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் 04-07-2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றுகிறார்.

அதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளிர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: அஸ்தம்பட்டி, சேலம் மாவட்டம்

தொடர்புக்கு: +91-9942713137, 9344480004, 9025060915, 9994033182
https://goo.gl/FhhTyD

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Exit mobile version