முகப்பு தலைமைச் செய்திகள்

அறிவிப்பு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் – வள்ளுவர்கோட்டம்

159

அறிவிப்பு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் – வள்ளுவர்கோட்டம் (08-07-2017) | நாம் தமிழர் கட்சி

கதிராமங்கலத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 08-07-2017 காலை 10 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றுகிறார்.

நாள்: 08-07-2016 சனிக்கிழமை, காலை 10 மணி

இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை

வலைதளம்: https://goo.gl/7h2VDt

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Exit mobile version