தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்

476

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 157வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (07-07-16) காலை சென்னை, காந்தி மண்டபத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசனின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கம் செய்தார்.

seeman-respects-irattaimalai-srinivasan
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் தன் வாழ்நாளின் இறுதிவரை உறுதியாக நின்று போராடியவர்.கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, அந்தக் காலத்திலேயே முதன்முதலாகப் பட்டப்படிப்பைப் படித்தவர்.

அண்ணல் அம்பேத்கர் பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து இந்த மண்ணின் மக்களுக்காக அரும்பாடற்றியவர். அண்ணல் அம்பேத்கரோடு இணைந்து லண்டன் வட்டமேசை மாநாட்டில் சாதியத் தீண்டாமை கொடுமைகளை அந்நாட்டு மன்னருக்கு எடுத்துரைத்து விளக்கியவர்.

பிறப்பின் அடிப்படையில் மனிதகுலத்தில் பேதம் பார்ப்பதை எதிர்த்துப் போராடியவர். ஏழை பணக்காரன், உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி, ஆண் பெண் பாலியல் வேறுபாடு இவை ஏதுமில்லாத ஒரு சமத்துவ சமூகம் உருவாகவேண்டும் என்று தான் பெற்ற கல்வியை வைத்து தன் அறிவாற்றலோடு அரும்பாடற்றியவர். சாதிய இழிவுகளால் அவமானப்படுத்திய காலத்திலேயே பறையன் என்று பெருமையோடு இதழ் நடத்திய பெருமகனார் நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். அவருடைய 157வது பிறந்தநாளில் அந்த பெருமகனார் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணியை நினைவுகூர்ந்து நமது புகழ்வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

அவர் எந்த நோக்கத்திற்காக இந்த மண்ணில் இறுதிவரை நின்று போராடினாரோ அதே நோக்கத்திற்காக வழிவழி வருகின்ற தமிழ் பிள்ளைகள் நாங்கள் உறுதியேற்று தொடர்ந்து பயணிப்போம். நாம் தமிழர்!

– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

seeman-respects-irattaimalai-srinivasan2seeman-respects-irattaimalai-srinivasan3
07-07-2016 தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்