பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை
நிகழ்வுகள்

துளி திட்டம் – 1000 பேர் 1000 ருபாய் | கட்சி வளர்ச்சி நிதி


இன்றே இணைவோம்: ‘துளி’ திட்டம் – துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

‘துளி’ திட்டம்; 1,000 நபர்களிடமிருந்து 1,000 ரூபாயை மாதந்தோறும் திரட்டுவதுதான் இதன் வேலைத்திட்டம். இத்திட்டத்தினைச் செயலாக்கம் செய்வதன்மூலம் நம் கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் பொருளாதார நெருக்கடியினை நம்மால் முழுமையாக அகற்றிவிட முடியும்.
இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியைக் கொண்டு, கட்சியின் நிர்வாகச் செலவுகள், தலைமை அலுவலக ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியச் செலவுகள், அன்றாடம் நடந்தேறும் கட்சி நிகழ்வுகளுக்கான செலவுகள், தலைமையால் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களுக்கான செலவுகள், பயணத்திட்டச் செலவுகள் என எல்லாச் செலவினங்களையும் நம்மால் சமாளித்து, கட்சிப்பணிகளை இன்னும் வீரியமாகத் துரிதப்படுத்த முடியும். இதனையுணர்ந்து இன விடுதலைக்களத்தில் அயராது நிற்கும் நாம் தமிழர் கட்சியைப் பேராற்றல் மிக்க அரசியல் பெரும்சக்தியாக மாற்ற இன்றே ‘துளி’ திட்டத்தில் இணையுங்கள்.

‘துளி’ திட்டத்தில் இணையக் கீழுள்ள படிவத்தில் உங்கள் விவரங்களைத் தந்து இணைந்து கொள்ளவும்.

ரூ.500ரூ.1000ரூ.2000ஏதேனும் ஒரு தொகை

2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு