சுற்றறிக்கை: தேர்தல் பணிகளுக்கான பயிற்சி மற்றும் முன் தயாரிப்புக் கலந்தாய்வு கூட்டம் (தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)

226

க.எண்: 202011471
நாள்: 17.11.2020

சுற்றறிக்கை:
சட்டமன்றத் தேர்தல் – 2021 | தேர்தல் பணிகளுக்கான பயிற்சி மற்றும் முன் தயாரிப்புக் கலந்தாய்வு கூட்டம் (தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அணியமாகும் பொருட்டு தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து தொகுதிகளின் தேர்தல் பணிகளுக்கான  பயிற்சி மற்றும் முன் தயாரிப்புக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 21-11-2020 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் மன்னார்குடி திருமக்கோட்டை சாலையில் அமைந்துள்ள வேங்கடானந்த் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து மாநில/மாவட்ட/தொகுதி/பாசறைப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல்:

காலை 10 மணி அகவணக்கம் வீரவணக்கம் உறுதிமொழி

வரவேற்புரை: ஐயா இரா.அரவிந்தன்,

திருவாரூர் தெற்கு மாவட்டச் செயலாளர்

முதல் அமர்வு:
காலை 10.20 – 10.40 மணி வரை வையத்தலைமை கொள்!

கல்வியாளர் மு.இ.ஹீமாயூன்
மாநில ஒருங்கிணைப்பாளர்

காலை 10.40 – 11.15 மணி வரை வெற்றி நிச்சயம்!

பெருந்தமிழர் ந.கிருஷ்ணகுமார்

தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர்

காலை 11.15 – 11.50 மணி வரை பேச்சுக்கலை

புதுகை ஜெயசீலன்,
மாநில கொள்கை பரப்பு செயலாளர்

காலை 11.50 – 12.00 மணி வரை தேநீர் இடைவேளை.
நண்பகல் 12.00 – 12.40 மணி வரை தேர்தல் களத்தில் எதிர்கொள்ளும் சவால்கள்

முனைவர் து.செந்தில்நாதன்
வீரத்தமிழர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பாளர்

நண்பகல் 12:40 – 1.15 மணி வரை தேர்தல் களமும், தமிழ்த்தேசிய அரசியலும்!

இடும்பாவனம் கார்த்திக்

மாணவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்

பிற்பகல் 1.15 – 2.00 மணி வரை தகவல் தொழில்நுட்ப பாசறை வழங்கும்

“புள்ளிவிபரங்கள் காட்டும்

 வெற்றியின் வெளிச்சம்”

 

காணொளிகள் மற்றும் ஆவணங்களோடு

விளக்குபவர்கள்:

சே.பாக்கியராசன், மாநிலச் செய்திப்பிரிவுச் செயலாளர்
மதன் நெடுமாறன், த.தொ.பா மாநிலச் செயலாளர்

பிற்பகல் 2.00 – 2.30 மணி வரை உணவு இடைவேளை
இரண்டாம் அமர்வு
பிற்பகல் 2.30- 3.30 மணி வரை. ஒருங்கிணைந்த சோழமண்டல வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் அவர்களின் உரைகள்.
மாலை 3.30 – 4.10 மணி வரை தேர்தல் களத்தில் பெண்கள்!

திருமதி காளியம்மாள்

மகளிர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்

மாலை 4.10 – 4.50 மணிவரை தேர்தல் பரப்புரைத் திட்டங்கள்!

 

பேராவூரணி திலீபன்

மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்

மாலை 4.50 – 5.00 மணி வரை தேநீர் இடைவேளை
மாலை 5.00 – 6.30 மணி வரை ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

ஒருங்கிணைப்பு:

வழக்கறிஞர் மணி.செந்தில்,

மருத்துவர் சர்வத்கான்,

இளைஞர் பாசறை – மாநிலச் செயலாளர்கள்

நன்றி உரை: வேதா.பாலா,
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்
தொடர்புக்கு: 9443677929,7550057257

திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் தொடங்கும் என்பதால் பொறுப்பாளர்கள் அனைவரும் உரிய நேரத்தில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிகழ்வில் பங்கேற்பவர்கள் அனைவரும் கொரோனா நோய்த்தொற்றுக்கால விதிகளுக்குட்பட்டு முகவுறை, கையுறை அணிந்து தனிமனித இடைவெளியை உறுதியாகப் பின்பற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநிலக்கோட்டை தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி – வீடு கட்ட உதவித் தொகை