அறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு

62

அறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு | நாம் தமிழர் கட்சி

2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. இத்தகைய ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் பலநாட்களாக அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்தனர். 26-04-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகேயுள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டக்கோரிக்கைகளுக்கு ஆதரவளித்து உரையாற்றினார். பின்னர் சிலநாட்களில் கல்வி அமைச்சர் வழங்கிய பரிந்துரைக் கடிதத்தையேற்று அப்போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப்பெறப்பட்டது. எட்டு மாதங்களைக் கடந்தும் இன்றுவரை தீர்வு எட்டப்படாதநிலையில் மீண்டும் அறவழிப்போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாளை (27-12-2018) வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 4 நாட்களுக்கும் மேலாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப்பெருமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டக்கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை
அடுத்த செய்திஅறிவிப்பு: தமிழர் திருநாள் பொங்கல் விழா ஏற்பாடுகள் குறித்த மகளிர் பாசறை கலந்தாய்வு – சென்னை