சுற்றறிக்கை: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பாக

1186

க.எண்: 202011468
நாள்: 16.11.2020

சுற்றறிக்கை: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பாக

வருகின்ற, சனவரி 01, 2021 அன்று 18-வயது நிறைவடைவோர் (01.01.2003-க்கு முன் பிறந்தவர்கள்) தங்களது பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏதுவாகவும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்காகவும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (16-11-2020) தமிழகத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாக்காளரும் தங்களது பெயரானது பட்டியலில் இருக்கிறதா என்பதை வட்டாட்சியார் அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் சரிபார்த்துக் கொள்ளவும், வாக்காளர்கள் தங்களுடைய பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை ஆவணச் சான்று நகலினை இணைத்து வழங்கவும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வருகின்ற நவம்பர் 21, 22 (சனி மற்றும் ஞாயிறு) மற்றும் டிசம்பர் 12, 13 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் சிறப்பு முகாம்களுக்குச் சென்று வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளலாம். சனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவிருக்கிறது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் கடைசி வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இதுவாக இருக்கலாம். ஆகவே இவ்வாய்ப்பை நாம் தமிழர் உறவுகள் தவறவிடாமல் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

  • நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ள கட்சி உறுப்பினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுற்றத்தினர் ஆகியோரில் சனவரி 01, 2021 அன்று 18 வயது நிறைவடைவோர் அனைவரையும் படிவம் 6-னை நிரப்பி, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
  • பெயர்கள் நீக்கம் தொடர்பாக, படிவம் 7-னைப் நிரப்பி அளிக்கவும்.
  • பட்டியலில் திருத்தம் தொடர்பாக, படிவம் 8-னைப் நிரப்பி அளிக்கவும்.
  • சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய இருப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, படிவம் 8A-னைப் நிரப்பி அளிக்கவும்.

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர, வட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் தங்கள் பகுதி உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதைச் சரிபார்த்து பட்டியலில் பெயர்கள் சேர்த்தல், திருத்தம் செய்தல் பணிகளை நிறைவு செய்ய அவர்களுக்கு உதவி செய்து நம் கட்சிக்கான வாக்காளர்களை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களின் பக்கம் அறத்தோடு நிற்கும் ஊடகவியலாளர்களின் பெரும்பணி சிறக்கட்டும்! – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திமதுரை துணிக்கடை தீவிபத்து மீட்புப்பணியின்போது, இன்னுயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்