மூன்றாவது நாளாக பீர்க்கங்கரணையில் துப்புரவுப்பணி
நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாளாக(20-12-15) துப்புரவுப்பணி தாம்பரம் அருகே பீர்க்கங்கரணையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...
பதினோறாவது நாளாக நாம் தமிழர் நிவாரணப்பணி
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பதினோறாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-12-15) சந்தித்தார். அதன்படி, அய்யப்பன்தாங்கல், ஆலந்தூர்,...
சோழிங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகளில் நிவாரணப்பணிகள்
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (08-12-15) பார்வையிட்டு, அவர்களுக்கு...
தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்-திருப்போரூர்
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் 26-11-15 அன்று காஞ்சி மாவட்டம், திருப்போரூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
...
அரசியல் என்பது மக்களுக்கான சேவை: நிரூபித்த தாம்பரம் நாம் தமிழர்
25-11-15 காலை 05.30 மணி முதல் 11 மணிவரை தாம்பரம்- முடிச்சூர் சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர் தாம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர்.
செங்கல்பட்டு தொகுதியில் மருத்துவ முகாம்
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம் இன்று (22-11-15) ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம்-அம்பேத்கர் நகர் பகுதியில் தொகுதி வேட்பாளர் சஞ்சீவிநாதன் தலைமையில் நடந்தது.
தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
கல்லுக்குட்டை பகுதியில் மக்களுக்கு உணவு வழங்கல்
காஞ்சி மாவட்டம், கல்லுக்குட்டை பகுதிக்குட்பட்ட பொன்னியம்மன் கோயில் ஓடை பகுதியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (20-11-15) இரவு உணவு வழங்கப்பட்டது.
செம்மஞ்சேரியில் மக்களுக்கு உதவி
காஞ்சி மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முந்தையநாள் (18-11-15) உணவு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட காஞ்சி மாவட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (19-11-15) சந்தித்து ஆறுதல் கூறி, உணவுப்பொருட்களை வழங்கினார். இதில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி, ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களையும்,...




