மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்

“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள் ” –  தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன்...

பெயரில்லா என் கவிதைகளிலிருந்து…….. – மாரி செல்வராசு

இன்னும் சிறிதுநேரத்தில் என்னை தூக்கிலிட்டுவிடுவார்கள் காலத்தின் கனம் தாங்காமல் கயிறு அறுந்துவிழும் பட்சத்தில் கோப்பை விஷம் வைத்திருக்கிறார்கள் சயனைடு குப்பியை சப்பாமல் தொலைத்துவிட்டவனை சாகடிக்க எதுக்கும் அவசியமில்லை எம் இலட்சியத்தின் மீதான ஆத்திரம் மட்டுமே போதும் அவர்களுக்கு -என் ஆணுறுப்பை நசுக்கியே என்னை கொன்றுவிடக்கூடும் ஆனால் அதுவல்ல பிரச்சனை உயிரற்ற என்...

சீமான் தொடுத்தே விட்டான்! விடுதலைப்போர்

நன்றி தமிழ்க் கொடி

கடனாநிதி – தமிழ்நாட்டின் ஒரு லட்சம் கோடி கடன்

'கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது பல காலத்துக்கு முன்பே கம்பன் சொன்ன உதாரணம். அப்படி ஒரு கலக்கம் தமிழக அரசுக்கு ஏனோ இன்னமும் வரவே இல்லை. 'கடன் அன்பை முறிக்கும்’...

தமிழக சட்டமன்ற வரலாறு!

தமிழக சட்டமன்றத்தின் வரலாறு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்குகிறது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், முந்தைய நிஜாம் மாநிலம் நீங்கலான தற்போதைய ஆந்திரப்பிரதேசம் ஆகியவை...

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி முறிந்தது – விலகியது தி.மு.க

காங்கிரசுடன் நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மத்திய காங்கிரசு கூட்டணியில் இருந்து விலகுவதாக தி.மு.க இன்று நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது. இருபெரும் துரோகிகளும் சந்தர்ப்பவாதிகளுமான...

தமிழர் புத்தாண்டு வேண்டுதல் – பேரறிவாளனின் தந்தை குயில்தாசன்

அய்யா! என் மகனை கண்டீர்களா? அம்மா! நீங்கள் கண்டீர்களா? பத்தொன்பது வயது சிறுவன் இருபதாண்டுகளாகக் காணவில்லை தேடித் தேடிச் சோர்ந்து போனேன். முதுமையால் இயலவில்லை நீங்கள் உதவி செய்வீரா ? கண்கள் பஞ்சடைத்து போயின. உங்களை எனக்கு தெரியவில்லை நீங்கள் மனிதர்தானே? நான் அனைவரையும்...

இறையான்மை என்றால் இதுதான் – இலக்குவனார் திருவள்ளுவன்

இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை....

தமிழ் தம்பி சீமான் ! – அறிவுமதி

இருந்தான் தம்பி என் தம்பி இருந்தான்! உள்ளே இருந்தான்! ஆம் உனக்குள்ளே எனக்குள்ளே உணர்வுள்ள நமக்குள்ளே இருந்தான்! தொரப்பாடி சிறைக்குள்ளே துளியளவே இருந்தான்! கடல் கடந்த தமிழர்களின் கருத்தான எண்ணத்தில் கடலளவு இருந்தான்! என்றும் இருப்பான்! அடங்கா பெரு நெருப்பின் அணையாத உணர்வழகன்! சிரிப்புக்குள் எகத்தாளம் சிறிதளவே சேர்த்து வைத்து எதிரிகளை மேடையில் ஏராளக் கேள்விகளால் குடைந்தெடுக்கத் தெரிந்திருக்கும் குடிசையிலே பிறந்து வந்த என் குற்றமற்ற தமிழழகன்! ஈழப் பெருந்தலைமை எழுப்பி வைத்தத் தமிழ் விழிப்பை ஊர்தோறும் உசுப்பிவிட உச்சரிப்பால் உழைப்பதற்கு உயர்ந்தெழுந்த உயிரழகன்! கைவிரித்து அவன்பேச கை கட்டி வாய் மூடி கவனிக்கும் கூட்ட மொத்தம் அவனோடு அவனாக அவன் சொல்லும் கருத்தோடு அப்படியே பயணிக்கும்! அதைத்தானே அதிகாரம் அச்சத்தில் கவனிக்கும்! அடிக்கடிதான் அழைத்தழைத்து சிறைக்குள்ளே போட்டடைக்கும்! இடுக்கில் வரும் நீதியினால் இழுத்துவிட முயன்றாலும் இரக்கமற்று இழுத்தடிக்கும்! நடக்குமுறை அத்தனையும் நாதி யற்ற தமிழர் மேல் அடக்கு முறை ஆனாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் கிழக்கு முறை தேடி கிளர்ந்தெழத்தான் வைத்த அந்தக் கிழத்தான் பெரியாரில் கிளைத் தெழுந்த கலை வளத்தான் என் தம்பி இதற்கெல்லாம் அஞ்சான்! இமியளவும் துஞ்சான்! அலுக்காத உடற்பயிற்சி அழகாக்க அவன் உடலை சேழிப்பான தேக்கெடுத்துச் சேதுக்கி வைத்தப் பலகையியென... அடுக்கடுக்காய் நூலெடுத்து அடிக் கோடும் தான் போட்டு அன்றாடம் படித்ததனால் அணை கட்டித் தேக்கிவைத்த ஆற்றல் மிகு அறிவோடு... சிறிதேனும் ஓய்வின்றி தினம் தினமும் விவாதித்துச் சேர்த்துக் கொண்ட அந்தப் பேரறிவாடு... வெளியே வந்தான் பார் என் வெற்றித் தமிழ்ப் பிள்ளை! ஆணவக் கடுநெஞ்சர் அடுக்கடுக்குத் தடை தாண்டி மீனவத் தமிழ் உறவோர் மீளாத் துயர்...

தாயின் மடி செல்ல தவமிருக்கிறேன் சிறையின் மடியில் – பேரறிவாளன்

“எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இந்த சோப்பு கட்டிதான் பயன்படுத்துகிறேன்.” என்ற தொலைக்காட்சி விளம்பரத்தினைப் பார்க்கும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் சிறைக்குள் நான் இருந்தேன்.” என...