ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மும்பையில் வாழும் தமிழர்களுக்கு நிவாரண பொருள் உதவி/ மும்பை

42

மும்பை மகிம் பகுதியில் சரியான உணவு இன்றி தவித்து தமிழ் நாடு முதல்வருக்கு கோரிக்கை வைத்து காணொளி எடுத்து வெளியிட்ட அந்த பகுதி மக்களை மும்பை நாம் தமிழர் கட்சி உடனேயே நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து வந்தனர் அதன்படி அந்த பகுதியில் இருக்கும் மொத்த 130 குடும்பங்களுக்கும் (28.4.2020) மாலை 5 மணிக்கு அரிசி,பருப்பு,எண்ணெய், உப்பு,சோப்பு,பால், அவல்,மஞ்சள், மசாலா குழந்தைகளுக்கு உணவு போன்ற சுமார் 80 ஆயிரம் மதிப்பு உள்ள பொருட்களை வழங்கினர் மேலும் அங்கே இருக்கும் கர்ப்பிணி பெண்கள் 4 பேருக்கும் நிதி உதவிகளையும் செய்தனர்
இந்த நிகழ்வில் தாராவி ஒருங்கிணைப்பாளர் மணி மாறன், மும்பை இணை ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார், தாராவி,மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மெர்சி நாடோடி தமிழன்,தாராவி மகளிர் பாசறை செயலாளர் நிலா ராணி ரூபன், அந்தோணி, மற்றும் சிலர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர் இந்த நிகழ்வை மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் ஒருங்கிணைத்து வழி நடத்தினார்

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திஊரடங்கால் பாதிக்கப்பட்ட மும்பையில் வாழும் தமிழர்களுக்கு உதவி /மும்பை