30 நிமிட புதிய பல போர் குற்ற ஆதாரங்கள் -”தண்டிக்கப்படாத குற்றங்கள்” – சானல் 4 தொலைக்காட்சி (காணொளி இணைப்பு)!!

88

வெளியாகியுள்ள கற்றுக்கொண்ட பாடத்திற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களை குறிவைத்து இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்த சூனியப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என அவ்வறிக்கையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறிய அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளமை வேடிகையான விடையம் என சனல் 4 தொலைக்காட்ச்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐ.நாவின் அறிக்கையை அது இணைத்து சில ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தை தயாரித்த “காலம் மக்ரே” அவர்கள் இதில் பல விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மேலும் “தண்டிக்கப்படாத குற்றங்கள்” என்ற தலைப்பில் மற்றுமொரு 30 நிமிட ஆவணப்படம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்ச்சி வெளியிட உள்ளது. வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ள இந்த ஆவணத் திரைப்படத்தில் புதிய பல போர் குற்ற ஆதாரங்கள் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி: தமிழ்த்தாய் இணயதளம்
http://www.tamilthai.com/newsite/?p=1820

முந்தைய செய்திஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல் ரவூப்” நினைவுகூறுவோம்!!
அடுத்த செய்திதமிழ் பெயர் பலகைகள் எப்படி இருக்க வேண்டும்/இருக்கக் கூடாது – இதோ உதாரணங்கள்!!