22-1-2011 அன்று ஜோலார்பேட்டையில் மரண தண்டனை ஒழிப்பு கருத்தரங்கம் செந்தமிழன் சீமான் சிறப்புரை.

21

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் கடந்த 20 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.ராஜீவ் கொலையில் அவர் உட்பட முருகன்,சாந்தன்,நளினி,ராபர்ட் பயஸ்,ஜெயக்குமார்,ரவிச்சந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை நியாயமற்றது என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும்,மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களது விடுதலையை வலியுறுத்தி தொடர் பிரச்சாரத்தை அதிக அளவில் நடத்த நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது.முதல் கட்டமாக வரும் 22  ஆம் தேதி(நாளை) மாலை 3 மணிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் சொந்த ஊரான ஜோலார்பேட்டை சந்தையில் அமைந்துள்ள  கேஜிஎஸ் திருமண மண்டபத்தில் பேரறிவாளனின் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்”நூல் ஆய்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.மேலும் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் தா.செ.மணி,வழக்கறிஞர் தடா சந்திரசேகர்,வழக்கறிஞர் பிரிட்டோ,பேராசிரியை சரசுவதி,சாகுல் அமீது ஆகியோரும் மற்றும் கல்வியாளர்களும்,அறிஞர் பெருமக்களும் கலந்து கொள்கின்றனர்.இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அனைவரும் தவறாது கலந்து கொள்ளும் படியும்,நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் முழுமையாகப் பங்கெடுத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முந்தைய செய்திபோர் குற்றவாளி ராஜபக்சேவை கைதுசெய்யக்கோரி பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்தி22.01.11 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நமது இணையதளத்தில் நிகழ்வு நேரலை செய்யப்படும்.