210 சிங்களவர்களை சொந்தச் செலவில் அழைத்து சுற்றிக்காட்டும் இந்தியா! தமிழா நீ என்ன இழிச்சவாயனா…!?

27

சிறிலங்காவில் போரில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 210 சிங்களவர்களை இந்திய மத்திய அரசு இலவசமாக இன்பச் சுற்றுலாவிற்கு அழைத்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு வசதிகள் செய்யப்பட்ட ரெயிலில் இவர்களை ரகசியமாக அழைத்துச் செல்வதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வேதனைகள் துன்பங்கள் மறையாத நிலையில் தாய்த் தமிழக மக்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 3ம் திகதி சென்னை வந்த 210 சிங்களவர்கள் எழும்பூர் கென்னட் ரோட்டில் உள்ள புத்தமடத்தில் ரகசியமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 3ம் திகதி காலை 10 மணிக்கு 4வது பிளாட்பாரத்தில் பத்துப் பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பயண ஏற்பாடு குறித்த விபரங்களை தெற்கு ரெயில்வேத் துறை அதிகாரிகள் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். காலை 11 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட 210 சிங்களவர்கள் சிறப்பு ரெயிலில் ஏற்றி அமர்த்தப்பட்டனர். 11.20 மணியளவில் இந்த ரெயில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

இவர்களின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய பத்து ரெயில்வே காவலர்கள் உடன் சென்றுள்ளனர். சிங்களவர்களின் உணவுத் தேவைகளை கவனிப்பதற்காக 35 ஊழியர்கள் கொண்ட குழு ஒன்றும் பற்றறி கார் பெட்டியும் இந்த சிறப்பு ரெயிலுடன் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயிலில் அழைத்துச் செல்லப்பட்ட சிங்களவர்கள் விஜயவாடா புத்தகாயா டெல்லி ஆக்ரா உள்ளிட்ட இந்தியாவின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய இடங்களிற்கு அழைத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் 24ம் திகதி சென்னை திரும்பி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்னைக்கு வந்து இன்பச் சுற்றுலாவிற்கு செல்லத்தான் விட்டுவிட்டார்கள்… திரும்பி வரும்போதாவது என்ன செய்யப்போகின்றார்கள் தமிழகத் தமிழர்கள்…? திருப்பி அடித்து ஓட ஓட விரட்டுகின்றார்களா… என்பதை உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.

இந்தியா – சிறிலங்கா இடையேயான நல்லிணக்கப் பயணமாக இந்த இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெற்கு ரெயில்வே நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து வேட்டையாடியது இந்தியாதான் என்று உலகத்தமிழர்கள் மார்தட்டிக் கூறிவந்தநிலையில் உண்மையினை நெடுநாள் மறைத்துவைக்க முடியாது என்பதற்கிணங்க தமது சமாதான பங்களிப்புத் தொடரர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நோர்வேயும் உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழர்களை கொன்று குவித்து இன்றளவும் விரட்டி விரட்டி கொன்றுகுவித்து வரும் சிங்களத்திற்கு சகலவிதத்திலும் ஒத்துழைப்பு கொடுத்து துணைநிற்கும் சோனியா காந்தி தலைமையிலான இந்திய அரசு தொடர்ந்து துரோகமிழைத்துவருவதைனையே இந்த சிங்களவர்களுக்கான இன்பச் சுற்றுலா திட்டம் உணர்த்தி நிற்கின்றது.

தினமும் தமிழக கடற்கரைகளில் சிங்களத்தால் தாக்குண்ட தமிழக சகோதரர்கள் வந்தவண்ணமுள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகரத்தில் இருந்து 210 சிங்களவர்கள் இனபச்சுற்றுலா சென்றுள்ளமையானது தமிழர்களை இழிச்சவாயர்களாக சிங்களவர்கள் நினைக்கத் தோன்றும் என்பது நிச்சயம்.

தமிழர்கள் நாம் இழிச்சவாயர்கள்  இல்லை இடிபோல் இறங்கி அடிப்பவர்கள் என்பதை சுற்றுலா முடித்து திரும்பும் நாளில் காட்டுவோம் தமிழர்களே.

–நன்றி ஈழதேசம் இணையம்.

http://www.eelamview.com/2011/11/14/210-singalese-tour-indi/

முந்தைய செய்திகாலி நாற்காலிகளை நிரப்ப உட்காந்த இராணுவத்தினர்: காமெடி !
அடுத்த செய்திவிரைவாக செயல்படுங்கள்: இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு