அறிவிப்பு: டிசம்பர் 10, மனித உரிமைகள் நாள்-2021 மக்கள் உரிமை ஒன்றுகூடல் – அமிர்தசரஸ் ( பஞ்சாப் ) | சீமான் பங்கேற்பு

750

க.எண்: 2021120294

நாள்: 07.12.2021

அறிவிப்பு:
டிசம்பர் 10, மனித உரிமைகள் நாள்-2021
மக்கள் உரிமை ஒன்றுகூடல் –
அமிர்தசரஸ் ( பஞ்சாப் )

நிகழ்ச்சி நிரல்:

நாள்: 10-12-2021, வெள்ளிக்கிழமை

காலை 11:30 மணி: பொற்கோயில் பார்வையிடல்

மாலை 05 மணி: கருத்தரங்கம் தொடக்கம்சான்ஜோக் விடுதி

வருகின்ற டிசம்பர் 10, மனித உரிமைகள் நாளையொட்டி, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த தல் கல்சா அமைப்பு சார்பாக அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள் பங்கேற்கும்மக்கள் உரிமை ஒன்றுகூடல்’ நடைபெறவிருக்கின்றது.

இந்திய ஒன்றிய அரசின் அதிகாரக் குவியல், ஒற்றைமயமாக்கல் கொள்கை, மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு, சகிப்புத்தன்மையின்மை, இஸ்லாமியர், கிறித்துவர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உருவாக்கப்படும் தவறான கருத்துருவாக்கங்கள், தனிமனித உரிமைகள் பறிப்பு மற்றும் மறுக்கப்படும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும், தேசிய இனங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நடைபெறவிருக்கும் இம்மாபெரும் ஒன்று கூடலில் காஷ்மீரி, நாகா, திரிபுரா, சீக்கியர் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களைச் சார்ந்த அரசியல் ஆளுமைகளோடு, தமிழ்த்தேசியப் பேரினத்தின் குரலாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களும் பங்கேற்று கருத்துரையாற்றவிருக்கின்றார் என்பதனை பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
    நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திகனிமவளக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து பந்தாடுவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா