சுற்றறிக்கை: மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்பு குழுவினரிடம் வழங்க வேண்டிய படிவங்கள்

830

சுற்றறிக்கை: மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்பு குழுவினரிடம் வழங்க வேண்டிய படிவங்கள்

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். அவ்வாறு மாவட்டக் கலந்தாய்வின் அடிப்படையில் மாவட்ட/தொகுதி/பாசறை/இதர பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பெயர், தொடர்பு எண் மற்றும் உறுப்பினர் எண் உள்ளிட்ட தகவல்களை உரிய முறையில் நிரப்பி மாநிலக் கட்டமைப்பு குழுவினரிடம் வழங்கி கலந்தாய்வின் முடிவில் குழுவினரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு பெறப்படும் பொறுப்பாளர்கள் பட்டியல் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் ஒப்புதல் பெற்று பொறுப்பாளர் நியமன அறிவிப்பாக வெளியிடப்படும்.

குறிப்பு: படிவங்களை நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.naamtamilar.org/) தரவிறக்கம் செய்துகொள்ளலாம்

தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

பாசறைப் பொறுப்பாளர்கள்

மாவட்டப் பொறுப்பாளர்கள்

இதர பொறுப்பாளர்கள்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி