2-ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தமிழகத்தில்27 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

28

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் இன்று 35 இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 27 இடங்கள் : தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. நக்கீரன் வார இதழின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டிலும் ,மயிலாப்பூரில் உள்ள அருட் தந்தை ஜெகத் கஸ்பர் ஆகியோரது வீடு மற்றும் அலுவலககங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

நுங்கம்பாக்கம் , காதர்நவாஸ்கான் ரோட்டில் இருக்கும் டிராய் மாஜி இயக்குநர் வீட்டிலும் ரெய்டு நடை‌பெறுகிறது. அதே சாலையில் இருக்கும் நிரா ராடியாவின் வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் குவிந்துள்ளனர். ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாஷா. இவர் கிரீன் ஹவுஸ் புரோமட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த வாரம் ரெய்டு நடந்தது. இன்று அந்நிறுவனத்தின் பங்குதாரரான சுப்புடு என்ற சுப்பரமணியன் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. சுப்புடுவும் ராஜாவுக்கு நண்பர் தான். மயிலாப்பூரில் இருக்கும் ‌பாதிரியார் ஜெகத் கஸ்பர் அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியிலும் ரெய்டு : திருச்சி திருவாணைக்காவல் பெரியார் நகரில் இருக்கிறது மாஜி அமைச்சர் ராஜாவின் சகோதரி விஜயாம்பாளின் வீடு. அவரது வீட்டுக்கு இன்று காலையில் சி.பி.ஐ., அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.டிராய் அதிகாரி வீட்டிலும் : டிராய் ( தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ) மாஜி தலைவர் பிரதிப் பாய்ஜால் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. பிரதீப் பாய்ஜால் 2004 -2008 காலகட்டத்தில் டிராய் தலைவராக இருந்தார். அவர் கடந்த 2009ல் நிராவின் அலுவலகத்தில் சேர்ந்தார்.

நிராவின் பூதாகர வளர்ச்சி ? என்.ஆர்.ஐ.., யான நிரா 9 ஆண்டுகளில் பூதாகர வளர்ச்சி அடைந்துள்ளார். 300 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய பிசினஸ் நிறுவனம் அமைத்தது எப்படி என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. நிரா வெளிநாட்டு நுண்ணறிவு நிறுவனங்களுக்கு உளவு வேலை பார்த்தாரா என்ற சலசலப்பும் நிலவி வருகிறது.சி.பி.ஐ., பிடியில் ஹவாலா ஏஜன்ட் : கடந்த 8ம் தேதியன்று ராஜாவின் வீட்டில் நடந்த ரெய்டின் ‌போது அவரது டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில் பண பட்டுவாடா குறித்து முக்கிய தகவல்கள் இருந்தததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய ரெய்டில் சி.பி.ஐ., வளையத்துக்குள் வந்திருக்கிறார் ஹவாலா ஏஜன்ட் ஒருவர். மகேஸ் ஜெயின் என்ற அந்த ஹவாலா ஏஜன்ட் பெயர் ராஜா டைரியில் இருந்ததாக கூறப்படுகிறது.

சோதனை மட்டும் போதாது: 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ., அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்தக்கது என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய ‌சாமி தெரிவித்துள்ளார். ஆனால் சோதனை மட்டும் போதாது. ஊழலுக்கு பின்னணியாக இருந்த ராஜா மீது சி.பி.ஐ., எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என்றார். 2ஜி ஊழல் : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் நாட்டுக்கும் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு தெரிவித்தது. நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து பார்லி., கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சிகள் நடத்திய அமளியால் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது. தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. 2ஜி விவகாரம் ஊழல் சார்ந்தது மட்டுமில்லை அது பல பரிமாணம் கொண்டதாக இருக்கிறது என கூறியிருந்ததார்.

முந்தைய செய்தி[காணொளி இணைப்பு] புதுச்சேரி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சீமான் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி
அடுத்த செய்திராஜபக்சேவின் சிங்கள சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பத்து இலட்சம் பேர் ஆர்ப்பாட்டம்.