வடசென்னை கொளத்தூர் பகுதியில் கொள்கை விளக்க போதுகொட்டம் மற்றும் சேனல் 4 காணொளி ஒளிபரப்பு கூட்டம் – நிழற்படங்கள் இணைப்பு!!

16

இலங்கையின் இனப்படுகொலை காணொளியை எப்படியாவது பொதுமக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்ற பெரும் நோக்கத்துடன், பல தடைகளை தாண்டி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அருகே உள்ள மக்கள் நெருக்கமான பகுதியில் இலங்கையின் கொலைக்களம் படத்தை நேற்று திரையிட்டனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பெண்கள், முதியவர்கள், குடியிருப்பு வாசிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதல் முறையாக இந்த காணொளி காட்சியை பார்த்து அதிர்ந்து போயினர். இப்படி எல்லாம் கொடுமை நிகழ்ந்துள்ளதா என வேதனைபட்டனர். இலங்கையை கட்டாயம் தண்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இது போல் திரையிடப்படுதல் மற்ற பகுதியிலும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோளும் பொதுமக்கள் வைத்தனர். அந்த பகுதி காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் நிறைந்த பகுதியானதால், இந்த இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் இந்த காணொளியை மக்களிடம் காட்டினர். இப்படிப்பட்ட வீர இளைஞர்களை பொது மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

இந்த கூட்டத்தில் தோழர் அன்பு தென்னரசன், அக்கா அமுதா நம்பி, தோழர் ச.அ. ராசு(மாதவரம்) பங்கேற்றனர். மற்றும் பெரம்பூர் பகுதி தோழர்கள் ஜோசப், ரீகன், செல்வகுமார், ஸ்ரீராம், குமார், எட்வின் மற்றும் அணைத்து கட்சி தோழர்களும் பங்கேற்றனர்.

நன்றி – எட்வின் மனோஜ்

முந்தைய செய்திதிருநெல்வே​லி அரசு சித்தவைத்தி​ய மருத்துவமனை​யின் அங்கீகாரத்​தை அரசு ரத்து செய்ததை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை நாம் தமிழர் கட்சி ஆதரவு – நிழற்படங்கள் இணைப்பு!!
அடுத்த செய்திவல்வெட்டித்துறை மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர்’ -வல்வை நகரசபைதலைவர்!