முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது

115

பந்தலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 32 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு தடையாக இருப்பதைக் கண்டித்து, பந்தலூர் பஜாரில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பந்தலூர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த்,பொன்.மோகன்தாஸ், பைந்தமிழ் பாரதி,சிவக்குமார், ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணி உள்பட32 பேரை தேவாலா போலீஸார் கைது செய்தனர்.

முந்தைய செய்திகடலூர் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திகன்யாகுமாரி மாவட்டம் சார்பாக நமது அண்ணங்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு துண்டறிக்கை இனிப்பு இரணியல் நீதிமன்ற வளாகதில் நமது கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது