முறைக்கேட்டின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு-தேனி

39

🛑 தேனியில் தற்காலிக உழவர் சந்தை அமைக்க ரூ.25 லட்சம் செலவு என கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.100 வசூல் கண்டித்தும் , பணம் வசூலிப்பதை நிறுத்தவும்

🛑தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாயிற்காவலர் முதல் மருத்துவர்கள் வரை பொதுமக்களை மரியாதை குறைவாக பேசுவதை கண்டித்தும் அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரியும்

🛑 ஆண்டிப்பட்டி ஒன்றியம் தேக்கம் பட்டி கோத்தலக்குண்டு மலையடிவாரத்தில் வண்ணானூத்து ஓடையில் 14 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டுவதாக கூறி செம்மண்ணில் கட்ட முயற்சி மேற்கொண்டதை விவசாயிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

🛑 இந்நிலையில் தரமற்ற தடுப்பணை கட்டியதை நிறுத்திய விவசாயிகளை மிரட்டி வரும் அந்த ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,தரமாக தடுப்பணை கட்டுவதை உறுதி செய்யவும் கோரியும்

🛑 2 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2000 நிவாரணத் தொகையை முறைப்படி விரைவாக செலுத்த ஆவண செய்யுமாறும் (14.07.2020) நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

முந்தைய செய்திசுரங்கபாதை சீரமைக்கும் பணி மனு – ஆலந்தூர்
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு – ஆம்பூர்