மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள அமைத்து புனிதமாக்கப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

314

வடக்கு மாகாணசபை ஆட்சி உத்தியோக பூர்வமாக பொற்றுப்பேற்ற பின்னர் இடித்தழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைத்து புனிதமாக்கும் செயப்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று வடமாகாணசபைத் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு யாழ்.ரில்கோ விருந்தினர் விடுத்தியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

வடக்கு மாகணத்தில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டுவிட்டிது. அவற்றில் ஒரு சில துயிலும் இல்லங்கள் தற்போது சிறிலங்கா இராணுவத்தினருடைய பாதுகாப்பு அரணாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் சில துயிலும் இல்லக் காணிகள் அரசாங்க திணைக்களங்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் முதலில் தடுத்து நிறுத்தப்படும், அதன் பின்னர் நிர்வாகத்தில் பரீசீலனை செய்யப்பட்ட பின்னர் அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களை மீள புனரமைத்து அழகுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறையின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் மற்றும் நகர்வுகள்:
அடுத்த செய்திவட மாகாண தமிழ் மக்களுக்கு ஈ.என்.டி.எல்.எப். வாழ்த்துக்கள்! – சிங்கள இனவாத அரசுக்கு தமிழ் மக்கள் புகட்டிய பாடம் இது!