போர்க்குற்றவாளி ராஜபக்சேவிற்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு.

36

சிறீலங்கா அரச தலைவருக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்து தமிழகத்தில் உள்ள மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை ஆதாரமாகப் பயன்படுத்தியே இந்த வழக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையம்கோட்டை பகுதியை சேர்ந்த பெரியன் (29) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை (29) தாக்கல் செய்துள்ளார்.

அயர்லாந்தின் தலைநகரான டப்பிளினில் இடம்பெற்ற நீதி விசாரணையின் போதும் மகிந்தா போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். சீக்கிய சமூகத்தின் மீதோ அல்லது முஸ்லீம் மக்களின் மீதோ உலகில் எந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் இந்தியா அது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் தாக்கப்படும்போது மட்டும் அது அமைதியாக இருக்கின்றது என முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மகிந்தாவை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்திய அரச தலைவரும், பிரதம செயலாளரும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி : ஈழம் நியுஸ்

முந்தைய செய்தி4-5-2011 அன்று ராஜபக்சேவை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தக்கோரி பரமத்தி வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திஇலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை.