போரின் போது ஐ.நா ஏற்படுத்திய குருதிக்கறைகளை அதன் அறிக்கை அழித்துவிடாது: த ரைம்ஸ்

23

போரின் போது ஐ.நா ஏற்படுத்திய குருதிக்கறைகளை அதன் அறிக்கை அழித்துவிடாது: த ரைம்ஸ்

வன்னிப் போரில் 20,000 மக்கள் கொல்லப்படலாம் என ஐ.நா அதிகாரிகள், ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியருக்கு தெரிவித்திருந்தனர். எனினும் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த நம்பியார் விரும்பவில்லை. எனவே போரின் போது ஐ.நா ஏற்படுத்திய குருதிக்கறைகளை அதன் அறிக்கை அழித்துவிடாது என த ரைம்ஸ் நாளேடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய நாடுகள் சபை சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, சிறீலங்காவில் இடம்பெற்ற போர் தொடர்பில் ஒரு அனைத்துலக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அழுத்தத்தை சிறீலங்கா அரசுக்கு ஏற்படுத்தப்போகின்றது.

ஐ.நாவின் அறிக்கை ஆதாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது. அவற்றில் காணப்படும் ஆதாரங்களில் சில ரைம்ஸ் நாளோட்டினால் பிரசுரிக்கப்பட்டவை. சிறீலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்களினால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இறுதி ஐந்து மாதங்களில் எறிகணைத் தாக்குதல்களில் 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக த ரைம்ஸ் நாளேடு முதலில் தெரிவித்திருந்தது. மனித உரிமை அமைப்புக்களும் பல ஆதாரங்களை ஆவணப்படுத்தியுள்ளன.

இரு தரப்பினரும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் அதில் உள்ளன. மனிதக் கேடையங்களாக மக்களை பயன்படுத்தியமை, சிறார் படைச்சேர்ப்பு போன்ற குற்றங்கள் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டாலும், சிறீலங்கா அரசின் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள் மற்றும் மகினதாபிமான உதவிகளை தடுத்தமை போன்றவற்றினால் தான் அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் நடைபெற்ற வடகிழக்கு பகுதியில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவருகின்றது. வெளிநாட்டு அவதானிப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் அங்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மக்களின் மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதை சிறீலங்கா அரசும் விரும்பவில்லை.

ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூவர் கொண்ட ஆலோசனைக்குழு ஒன்றை கடந்த வருடம் அமைத்திருந்தார். சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதே அதன் பணி. மேற்குல நாடுகளினதும், மனித உரிமை அமைப்புக்களினதும் அழுத்தங்களை தொடர்ந்தே அவர் அதனை மேற்கொண்டிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா வெள்ளைச்சாயம் பூச முற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

வன்னிப் போரில் 20,000 மக்கள் கொல்லப்படலாம் என ஐ.நா அதிகாரிகள், ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியருக்கு தெரிவித்திருந்ததாக ஐ.நா அதிகாரிகள் எமது ஊடக்திற்கு தெரிவித்துள்ளனர். எனினும் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த நம்பியார் விரும்பவில்லை. அதற்கு காரணம் நம்பியாரின் சகோதரர் சரீஸ் நம்பியார் என்பவரே சிறீலங்கா இராணுவத்திற்கு பணத்திற்காக ஆலோசனைகளை வழங்கி வந்திருந்தார். சரீஸ் நம்பியார் இந்திய இராணுவத்தின் முன்னாள் ஜெனரல்.

ஐ.நாவின் ஆலோசனைக்குழு சிறீலங்கா சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசு அனுமதி வழங்கவில்லை. எனினும் அவர்கள் புகைப்படங்கள், காணொளிகள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பெற்றிருந்தனர்.

ஐ.நாவின் அறிக்கையை சிறீலங்கா அரசு நிராகரித்துள்ளது. ஆய்வு செய்யப்படாது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த அறிக்கை ஐ.நாவின் மேலதிக நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளதுடன், சிறீலங்காவுக்கும் – அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் இடையில் மோதல்களையும் உருவாக்கியுள்ளதாக மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அமெரிக்காவும் கடந்த மாதம் தீர்மானத்தை கொண்டுவந்திருந்தது. ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழு மூலம் பான் கீ மூன் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்காவை கொண்டு செல்வது கடினமானது, ஏனெனில் சீனா போன்ற எதிர்த்தரப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக உள்ளன.

லிபியா மீது நேட்டோ படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் ஐ.நா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. லிபியா மீதான தாக்குதலுக்கு முன்னர் கேணல் கடாபியை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வது தொடர்பில் பாதுகாப்புச்சபை ஓப்புக்கொண்டிருந்தது.

சரணடைந்த விடுதலைப்புலிகளை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் உத்தரவின் பேரில் சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்ததாக தற்போது சிறையில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.

முந்தைய செய்திஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை – சனல் 4
அடுத்த செய்திஈழத்தமிழர்களுக்கான உரிமையை மீட்டு தருமாறு – நெல்லை கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து இறந்தார்.