பொறியியல் படிப்பில் தமிழை தேர்வு செய்ததால் வங்கி கடன் மறுப்பு செம்மொழி விழா கண்ட தமிழ் திருநாட்டில்.

241

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தை கைவிட்ட நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். 12 ஆம் வகுப்பு தேர்வில் 819 மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங் முறையில் பட்டுக்கோட்டை ராஜா மடம் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., மெக்கானிக்கல் பயின்று வந்தார். இதற்கு தமிழ் மொழியை தேர்வு செய்தார். படிப்பு செலவுக்காக, முதுகுளத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். வங்கியில் முறையான தகவல் இல்லை. விண்ணப்பித்து பல நாட்கள் கடந்த நிலையில், கட்டணம் கட்டவேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால், உதவி கேட்டு ராமநாதபுரம் ஆட்சியாளர் அலுவலகம் சென்று அங்கு நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். “தமிழைத் தேர்வு செய்ததால் கண்டிப்பாக வேலை கிடைக்கப் போவதில்லை. இதற்கு எப்படி கடன் தர முடியும்?’ என, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

ஆத்திரம் அடைந்த பாலமுருகன் கூறியதாவது : தமிழ் செம்மொழி மாநாடு நடத்திய தமிழகத்தில், தமிழைத் தேர்வு செய்ததற்காக கடன் உதவி தர மறுக்கின்றனர்; வேலை கிடைக்காது என பேசுகின்றனர். அதிகாரிகளே இப்படி இருந்தால் எப்படி முறையிட முடியும்? எனக்கு பணம் கிடைக்காத பட்சத்தில், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லையென பாலமுருகன் கூறினார்.

நன்றி

தினமலர்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாள் அவர்களுக்கு நெய்வேலி நாம் தமிழர் கட்சி நடத்திய வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திவீரத்தாய் பார்வதி அம்மா அவர்களின் மறைவுக்கு செந்துறை நாம் தமிழர் சார்பாக ஒட்டியுள்ள சுவரொட்டி