[புகைப்பட தொகுப்பு இணைப்பு] எங்களை காங்கிரசும் காப்பாற்றவில்லை கருணாநிதியும் காப்பாற்றவில்லை – சீமானிடம் வெதும்பிய திருப்பூர் மக்கள்.

22

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை அழித்தொழிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்ப்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செந்தமிழன் சீமான் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்றினார்.

பிரச்சாரத்தின் போது செந்தமிழன் சீமான் அவர்கள் பேசியதாவது :

காங்கிரஸ் கட்சியின் முதன்மை கொள்கையே ஊழல் மட்டும்தான் ஊழலைத் தவிர அந்த கட்சியில் சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. கார்கில் போருக்கு ஆயுதம் வாங்கியதில் ஊழல், கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவத்தினருக்கு சவப்பெட்டி செய்வதில் ஊழல், மரணமடைந்த ராணுவத்தினரின் மனைவிகளுக்கு வீடு வழங்குவதில் ஊழல்,  காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல், அடுத்ததாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல்.என்று காங்கிரசின் ஊழல்களை பற்றி மக்களிடம் விளக்கி கூறினார். காங்கிரஸ் கட்சி செய்ததில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று இந்த தேசத்தை ஜனநாயக தேசமாக மாற்ற போராடி செத்த மாமனிதர்களின் தியாகத்தை அலட்சியப்படுத்தி பணநாயகமாக தேசமாக மாற்றியது மட்டும்தான்.

தமிழகத்தின் முதுகெலும்பாக இருக்கும்  கைத்தறி,பின்னலாடை,சாயப்பட்டறை,ஆகிய துறைகளை தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்கும் திருப்பூரில் இன்று இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கும் போது கூட சரியான தீர்வை காணமல் அலட்சியப்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்றும்,காஷ்மீரை பிரித்து கொடுக்க முடியாது என்று சொல்லும் காங்கிரஸ் கட்சி யாரை கேட்டு கச்சத்ததீவை இலங்கைக்கு கொடுத்து, மீன்பிடிக்க செல்லும் எம் மீனவ சொந்தங்களை நாயை சுடுவதுபோல சுட்டுத் கொல்கிறான் சிங்களன்,இதற்கெல்லாம் துணை போன காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் வாக்கு என்று கேள்வி எழுப்பினார். வருங்கால நம் தமிழ் பிள்ளைகளின் வாழ்வும், வளமும் பெற்று  தன்மானத்துடம் வாழவேண்டுமென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்று மக்களிடையே பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் சிவக்குமார்,மதுரை வெற்றிக்குமரன், திருப்பூர் செல்வம், தமிழர் அரப்பா,உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செந்தமிழன் சீமான் அவர்கள் அவரது உரையை முடித்துவிட்டு மேடையில் இருந்து கிழே இறங்கிய பொழுது சரியான தீர்வு காணப்படாமல் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளை இழுத்து மூடியதால் தங்களது வேலையை இழந்து தவிக்கும் இளைஞர்கள் “அண்ணா எங்களை காங்கிரசும் காப்பாற்றவில்லை … கருணாநிதியும் காப்பாற்றவில்லை” என்று வெதும்பினர்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த செய்திகரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை 5-4-2011