படையணித் தலைவர் சுப.தமிழ்செல்வன் நினைவுநாள் (02-11-2016) – வீரவணக்கம் | சீமான்

39

படையணித் தலைவர்
நம் அண்ணன் சுப.தமிழ்செல்வன்
(அரசியல் பிரிவு பொறுப்பாளர் – விடுதலை புலிகள்)
நினைவுநாள் (02-11-2016) – வீரவணக்கம்
====================================
உணர்வை இழந்து,
உரிமையையும் இழந்து,
அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக,
மக்கள் படை கட்டிப் புரட்சி செய்த
மாபெரும் தலைவனின் தளபதி!
அன்னை தமிழீழத்தில்
அவன் அரசியல் துறையின் பொறுப்பு!
நிதியும் கூட அவன் இருப்பு!
அனைத்திலும் நிர்வாகம் மிகச்சிறப்பு!
மண்ணின் விடுதலைக்காக
மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவிய
மாவீரர்கள் வரிசையில் மகத்தானவன்!
தன் இன்சொல்லால்,
புன்சிரிப்பால்
அன்பின் வேரை அனைத்துலகிற்கும் பரப்பியவன்!
சந்தனப்பேழை
அவன் சமாதானத்தின் தூதுவன்
சரித்திர நாயகன்
பன்னெடுங்காலமாக
தமிழ்த்தாய் தவமிருந்து பெற்ற தவச்செல்வன்
நம் அண்ணன்
சுப.தமிழ்ச்செல்வன் அவர்களினுடைய நினைவுநாள் இன்று (02-11-2016)
தாயக விடுதலை என்ற புனிதக்கனவைச் சுமந்து பூமியில் விதையாய் விழுந்த
அந்த மாவீரனின் நினைவை
ஒவ்வொரு தமிழனும்
தன் நெஞ்சில் ஏந்துவோம்!
அவன் கனவை நிறைவேற்ற
இந்நாளில் நாம் உறுதியேற்போம்!
பெருமிதத்தோடும், திமிரோடும்
அந்த மாவீரனுக்கு
நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுத்துராமலிங்கத்தேவர் நினைவேந்தல் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்
அடுத்த செய்தி4 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு