[படங்கள் இணைப்பு] மன்னார்குயில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கு – இளைஞர் பாசறை கட்டமைப்பு

48

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் கடந்த 31-05-2011 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் நாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கும், 8 மாவட்ட இளைஞர் பாசறை கட்டமைப்பும் நடைபெற்றது.


இந்த பயிலரங்கில் தமிழ்த் தேசியமும், திராவிடமும் என்ற தலைப்பில் இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் உரையாற்றினார். மார்க்சியமும், தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர் பேராசிரியர்.கோவை கல்யாணசுந்தரம் உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பில் தேசிய இனங்களுக்கான விடுதலை என்ற தலைப்பில் இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர்.ராசீவ் காந்தி (எ) அறிவுச்செல்வன் உரையாற்றினார். கட்சி கட்டமைப்பு குறித்து தோழர்.பாஸ்கர் அவர்கள் உரையாற்றினார். இறுதியாக தமிழ்த்தேசியத்தின் பன்முகத்தன்மை என்ற தலைப்பில் பேராசிரியர் இளமுருகனார் உரையாற்றினார். நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.அ.நல்லதுரை ஒருங்கிணைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர். தமிழ்முழக்கம்.சாகுல் அமீது சிறப்புரை நல்கினார். நிகழ்வினை மன்னார்குடி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் பாரதிச்செல்வன் ஏற்பாடு செய்திருந்தார். திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.வீரக்குமரன் நன்றி நவின்றார்.


முன்னதாக தஞ்சை வடக்கு,தஞ்சைதெற்கு, திருவாரூர், நாகை கிழக்கு,நாகை மேற்கு அரியலூர்,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கான இளைஞர் பாசறை கட்டமைப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை இளைஞர் பாசறையின் மாநில அமைப்பாளர்கள் வழக்கறிஞர்.மணி செந்தில், வழக்கறிஞர்.ராசீவ் காந்தி , பேரா.கல்யாணசுந்தரம் ஆகியோர் நடத்தினர்.

முந்தைய செய்திராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சி ஒட்டியுள்ள சுவரொட்டி
அடுத்த செய்திஇலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் ஒட்டிய சுவரொட்டி.