[படங்கள் இணைப்பு] சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு செந்தமிழன் சீமான் நேரில் ஆறுதல்.

32

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.  உலகக்கோப்பையை இந்தியா வென்றதின் காரணமாக வெறிபிடித்த சிங்கள கடற்படையினர் தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற 4 தமிழக மீனவர்களை மிகக் கொடூரமாக கொன்றனர். இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செம்ந்தமிழன் சீமான் அவர்கள் இறந்தவர்களின் குடுமத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சீமான் அவர்கள் இலங்கைக் கடற்படையால் 500- க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டும் இன்றுவரை கொலைகள் நின்றபாடில்லை.மீனவர்களின் நலனில் அக்கறை காட்டாத மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.மத்திய அரசோ நிருபமாராவ் போன்ற அதிகாரிகளை அனுப்பி இலங்கையை கண்டிப்பதாக நாடகம் ஆடுகிறது. கருணாநிதியோ கடிதமாக எழுதி நாடகம் நடத்தி  வருகிறார்.தமிழர்களின் கடல்வளம் திட்டமிட்டு இந்திய, சிங்கள அரசுகளால் தமிழர்களிடமிருந்து பறிக்கப்படும் சதிக்கு எதிராக ஒன்றுதிரளவேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தார்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]ஈரோட்டில் நடைபெற்ற ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வீரவணக்க பொதுக்கூட்டம் மற்றும் பேரணி.
அடுத்த செய்திகறுப்பு பண பிரச்சினையில் இத்தனை ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு இருந்தீர்களா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.