[படங்கள் இணைப்பு] கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற இராசபட்சேவை தூக்கில் ஏற்றி, கொடும்பாவி கொளுத்தும் கண்டன ஆர்பார்ட்டம்

30

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 29-04-2011 வெள்ளி அன்று மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கும்பகோணம் காந்திப் பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பார்ட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்பார்ட்டத்திற்கு தஞ்சை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் வீரக்குமரன் என்ற வினோபா தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சதா முத்துகிருட்டிணன் மற்றும் நாகை மாவட்ட அமைப்பாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் வீரக்குமரன்,குடந்தை நகர அமைப்பாளர் ரகமதுல்லா என்ற தமிழ்வேந்தன், தஞ்சை மாவட்ட துணை அமைப்பாளர் நாதன், மற்றும் பலர் உரையாற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர்.வழக்கறிஞர். அ.நல்லதுரை, இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில் என்ற திலீபன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கண்டன ஆர்ப்பார்ட்டத்தில் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்கக் கோரியும், இந்தியா இலங்கைக்கு துணை போவதை கண்டித்தும், தமிழீழ அரசை அங்கீகரிக்கக்கோரியும் முழக்கங்கள் இடப்பட்டன. மாவட்ட இளைஞர் பாசறை அமைப்பாளர் ராம்குமார் இனவெறியன் இராசபக்சேவாகவும், மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் மணி செந்தில் தமிழின வழக்கறிஞராகவும் வேடம் தாங்கி நடித்த வீதி நாடகம் நடைப்பெற்றது. அந்த நாடகத்தின் முடிவில் ராசபக்சேவிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவனது கொடும்பாவி தூக்கில் ஏற்றப்பட்டது. பிறகு ராசபக்சே கொடும்பாவி கொளுத்தப்பட்டு முழக்கங்கள் போடப்பட்டன. 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்துக் கொண்ட இந்த உணர்ச்சிமயமான நிகழ்வினை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு உணர்வெய்தினர்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு ராஜபக்சே சகோதர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கூறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திதொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்து புதுவை நாம் தமிழர் உண்ணாநிலை போராட்டம்