நேரலை : இலங்கையின் தமிழின அழிப்பு மற்றும் போர்குற்றங்கள் – பெங்களூருவில் இன்று கருத்தரங்கம்.

34

இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான கருத்தரங்கம், பெங்களூரில் இன்று 02-07-11 நடைபெறுகிறது. இதில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி உட்பட பல இயக்கங்கள் பங்கெடுக்கின்றன.

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு சார்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பெங்களூர் பல்கலைக்கழக பேராசிரியர் பால்நியூமேன் (டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் பங்காற்றியவர்) , மனித உரிமை ஆர்வலர் நக்ரகரே ரமேஷ், , எழுத்தாளர் ஜி.ராமகிருஷ்ணா, மனித உரிமை ஆர்வலர் ஹரகோபால், எழுத்தாளர் குமார் புருடைகுட்டி, தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெங்கடேசன், மாணவர் காலித்வாசீம் ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாட இருகின்றனர்.

இந்த நிகழ்வுகன்னட மக்கள் உரிமை இயக்கங்கள் ஒருங்கினைப்பில்,  கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி உட்பட பல இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், கட்சிகள் பங்கேற்கின்றன. பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் நண்பர்கள் உறவுகளுடன் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுகொள்கிறோம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : கன்னட மக்கள் உரிமை இயக்கங்கள்

இடம் :  மாணவர் கிறிஸ்துவ இயக்க அரங்கம்

நேரம் : ஜூலை 2-ம் தேதி மாலை 4 மணி

தொடர்புக்கு: 080-9886002570

நேரலை : இந்நிகழ்வு நாளை மாலை 4 மணி முதல் நாம் தமிழர் இணையத்தில் நேரலை செய்யப்படும்.

www.naamtamilar.org/valaithirai

முந்தைய செய்திதஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக வருகிற ஜீலை 4 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்தி[2ஆம் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது