நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

37

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம்

நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கடந்த ஒரு மாத காலத்தில் பின்னலாடை உற்பத்திக்கு மூலகாரணமாக உள்ள நூலின்
விலை ஒரு கிலோவிற்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்க்கு காரணம் மத்திய
அரசின் தவறான ஏற்றுமதிக் கொள்கையே ஆகும்.விவசாயி அறுவடை செய்யும்போது பருத்தி ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்து விடுகிறது.அதனால் விவசாயி பருத்தியை மிகக்குறைந்த விலைக்கு இடைத்தரகர்களுக்கு விற்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.

விவசாயிகளிடமிருந்து எல்லா பருத்தியையும் வாங்கிவைத்து
பதுக்கிய இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூட்டணி , பின்
விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்க வேண்டி ஏற்றுமதிக்கு அனுமதி கேட்டு ,மிக அதிக விலைக்கு விற்று கொளுத்த லாபம் சம்பாதிக்கிறார்கள். பருத்தி விலை உயர்ந்ததால் உள்ளூரில் உள்ள நூல் ஆலைகளும் பருத்தியை பதுக்கி வைத்து அதிக  விலையில் நூலை விற்கிறார்கள்.இதனால் பின்னலாடை,நெசவுத்தொழிலை நம்பியுள்ள 10 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைகிறார்கள்.

விவசாயிகளுக்கு அரசு பருத்தியின் குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ஒரு கண்டி  ரூ 10,000 முதல் ரூ 12500 வரை  நிர்ணயம் செய்யதுள்ளது.ஆனால்
தற்போது பருத்தி ஏற்றுமதி ஒரு கண்டி (355.6 KG) 32000 ரூபாய்க்கு
விற்கப்படும் வேளையில் விவசாயிகளுக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ள
குறைந்தபட்ச கொள்முதல் விலைமிக மிகக்  குறைவே.ஏற்றுமதி
அனுமதிக்கப்படாவிட்டால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்று கூறுவதே மக்களை ஏமாற்றும் வேலை.இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் லாபமடையவே இதை பயன்படுத்துகிறார்கள்

விவசாயிகளின், தொழிலாளிகளின் வயிற்றில் அடித்து சட்டங்கள் மூலம் நம்மை சுரண்டும் மத்திய அரசை கண்டித்து இன்று  ( 18.04.2013)  மாலை  திருப்பூர்
தொடர்வண்டி நிலையம் முன் பருத்தி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த  நிகழ்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட பொருளாளர்  பரமசிவம் தலைமை
வகித்தார் .

தலைவர்  கௌரி சங்கர் , இணைச்செயலாளர் சமரன் பாலா முன்னிலை  வகி த்தனர் .

மண்டல    செயலாளர் கரிகாலன் ,மற்றும்  திருப்பூர் தெற்கு,வடக்கு உறவுகள் கலந்து கொண்டனர்.

 மாவட்

 

 

 

முந்தைய செய்திமாபெரும் பொதுக்கூட்டம் – பெங்களூர்
அடுத்த செய்திஈடிணையற்ற பன்முகத் திறன்கொண்ட நிர்வாகியை தமிழினம் இழந்துவிட்டது