நீதி நோக்கிய மிதியுந்துப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்-டெனிஸ் தமிழ் அமைப்பு

10

நீதி நோக்கிய மிதியுந்துப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்-டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் சார்பில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று தியாகி கேணல் திலீபன் அவர்களின் கூற்றிற்கு அமைய வடதமிழீழ மக்கள் தமது தமிழீழ அவாவை பெரும் சிங்கள இராணு அச்சுறுத்தலிற்கு மத்தியில் மாகாணசபை வாக்கெடுப்பின் மூலம் வெளிப்படுத்தி
புரட்சியொன்றினை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதேவேளை ஜரோப்பிய ஒன்றியம் தமிழ் மக்கள் மீதான தனது தார்மீக பொறுப்பையுணர்ந்து ஜெனீவா மனிதவுரிமை ஆணையகத்திற்கு அரசியல் அர்த்தத்தினை கொடுத்து அனைத்துலக விசாரணையொன்றிற்கு வழிகோரவேண்டுமென்றும், அனைத்துலக விசாரணை மூலம் தமிழ்மக்களிற்கு விடிவு ஏற்படுமென்ற நம்பிக்கையுடனும், தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வேலைசெய்யவேண்டுமென்ற விருப்பத்துடனும்
மிதியுந்து பயணத்தினை மேற்கொண்டுவரும் கிருபானந்தன், சிவந்தன் ஆகியோருடைய சாத்வீகப்போராட்டத்திற்கு எமது ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஜெனீவா நகரிலிருந்து 16.09.2013 அன்று ஆரம்பித்த இந்த மிதியுந்துப்பயணம் 30.09.2013 அன்று புறுசெல்ஸ் நகரத்தில் நிறைவுபெறும். இந்நாளில் இங்கே பேரணி ஒன்றும் ஏற்பாடாகியுள்ளது. அனைத்துத் தமிழ் உறவுகளையும்
இப்பேரணியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முந்தைய செய்திமூடப்படுகிறது பூந்தமல்லி சிறப்பு முகாம்! – அகதிகளை கும்மிடிப்பூண்டிக்கு மாற்ற நீதிமன்றம் பச்சைக்கொடி.
அடுத்த செய்திதிலீபனின் இழப்பு பராத நாட்டை தலைகுனியவைத்த நிகழ்வு!