நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சிறீலங்கா உயர் நீதிபதி

20

சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என சிறீலங்காவில் உயர் நீதிபதியாக பதவி வகித்து ஓய்வுபெற்றுச் செல்லும் நீதிபதி அசோக டி சில்வா கூறியுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

குற்றங்கள் சுமத்தப்படாது சிறையில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை அனுமதிகளை ஆராய்ந்து நாம் அதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

குற்றங்கள் சுமத்ப்படாது நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பான தகவல்களை தருமாறு நீதி ஆணையாளர் நாயகத்திற்கும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அவரின் அறிக்கையின் பிரகாரம் பெரும்பாலான கைதிகள் குற்றங்கள் சுமத்தப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பலர் சிறிய குற்றங்களுக்காக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எல்லோரும் போருடன் தொடர்புடையவர்கள் அல்ல.

எனவே கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என நான் சிறீலங்கா நீதி ஆணையாளரை கேட்டுக்கொள்கிறேன். சிலர் மீது விசாரணைகள் நடத்தப்படவேண்டி இருந்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர்கள் விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு சமூகம் தரலாம் என தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திபோர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரிக்க இலங்கை ஒப்புதல் அளிக்க வேண்டும் – பான்கி மூன்
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.