“நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” – மாபெரும் கருத்தரங்கம்

62

செய்தி: “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” – மாபெரும் கருத்தரங்கம் | நாம் தமிழர் கட்சி – மருத்துவப் பாசறை

நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை நடத்திய “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” எனும் தலைப்பிலான மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கம் நேற்று செப்டம்பர் 18 திங்கட்கிழமை மாலை 06 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. 

மருத்துவர் இரவீந்தரநாத், தொழில்நுட்ப அறிவுரைஞர் பொன்ராஜ், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் தாயப்பன், மருத்துவர் இளவஞ்சி, மருத்துவர் ம.மதிவாணன், சமூகச் செயற்பாட்டாளர், நடிகை கஸ்தூரி, சமூகப் போராளி சபரிமாலா இவர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

முன்னதாக தங்கை அனிதாவின் உருவப்படத்திற்கும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் உருவப்படத்திற்கும் சுடரேற்றி மலர்வணக்கம் செய்யப்பட்டது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
செந்தில்குமார். கு (+91- 9600 70 9263)
மாநிலச் செய்திப்பிரிவு இணை செயலாளர்

முந்தைய செய்திதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபனை விதைகளை விதைக்கும் நாம் தமிழர் உறவுகள் – திருக்கோவிலூர்