நாம் தமிழர் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 24.7.2011 அன்று மாலை கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது

83

திருப்பூர் மாவட்டத்தில் பகுதி வாரியாக பொது கூட்டம் நடத்துவது என திட்டமிடப்பட்டது அதன் படி முதலாவது கூட்டம் திருப்பூர் 4  வட்டகளை உள்ளடக்கிய .வளையன்காடு பகுதியில் 24.7.2011 அன்று மாலையில் நாம் தமிழர் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுமார் ஐந்நூற்றிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆவலுடன் கலந்து கொண்டனர்

முதலில் இந்நிகழ்ச்சி கருப்பு சூலை கலவரத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கும், வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற போராளிகளுக்கு அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த எழுச்சிமிகு கூட்டத்தை வலயன்காடு பகுதி அமைப்பாளர் பாலாசி  வந்திருந்த பொதுமக்களை வரவேற்றார்

பின், மகளிர் அணி அமைப்பாளர் குமுதவல்லி அவர்கள் மகளிரும், பெண்டிரும் இல்லாமல் உலகின் எந்தவொரு புரட்சியும் வெற்றி பெற்றது இல்லை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். அடுப்படியில் வீட்டில் அடிமையாய் வாழ்ந்த ஈழத்தமிழ் மகளிர் அங்கு நடந்த அரசியல் சமுதாய போர் புரட்சியை  எப்படி முன்னிலையில் இருந்து நடத்தினர் என்பதையும் பொதுமக்களுக்கு பலத்த கரவொலிக்கிடையில் விளக்கினார்

பின்னர் பேசிய அவினாசி பகுதி அமைப்பாளர் தமிழன் வடிவேல் அவர்கள் தமிழர்களின் வீர வரலாற்றையும், தற்கால அடிமை நிலையையும் வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துரைத்து தமிழர்களை ஓரணியில் திரட்டி நாம் தமிழர் கட்சி எவ்வாறு தமிழ் இனத்திற்காக போராடிகொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டினார்

அடுத்துப் பேசிய தாராபுரம் பகுதி அமைப்பாளர் சுரேசு அவர்கள் வல்லாதிக்க இந்திய அரசாங்கம் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் காலங்காலமாய் செய்துவரும் அநீதிகளையும் அட்டூழியங்களையும், தமிழர்களை அழிக்க சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி, பணம் மற்றும் ஆயுத உதவிகளை செய்துவரும் நிலையையும் விளக்கினார்   இளைஞர் பாசறை மாநில அமைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் தன்னுடைய எழுச்சிமிகு பேச்சால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக வந்திருந்த பொதுமக்களை – சானெல் நான்கு தொலைக்காட்சியின் ஆவணப்படம் – உலக அளவில் அதன் பாதிப்புகள் – இலங்கை மீது பொருளாதாரத் தடை – சிங்கள பணியாட்களை வேலைக்கு வைத்திருக்கும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கையில் தயாராகும் தம்ரோ மரச்சாமான்கள் ஆகியவற்றைப் புறக்கணிக்கக்கோரி நீண்ட நெடிய உரையாற்றினார்

மாநில தலைமை கழகப் பேச்சாளர் செயசீலன் தன்னுடைய உணர்ச்சிமிகு உரையில் தமிழ் – தமிழர் – நாம் தமிழர் – விடுதலை புலிகளின் வீர வரலாறு – இன்றைய ஈழத்தமிழர் வாழ்நிலை – தமிழ்நாட்டுத் தமிழர்களின் இன்றைய இழிநிலை – நாம் தமிழராகிய நாம் செய்யவேண்டியது என்ன – என்பதைபற்றி மிகதெளிவாக விளக்கினார்

இந்தப் பொதுக்கூட்டத்தை தமிழன் வடிவேலு , காளிசரண், பாலாசி, மாரிமுத்து, குணசேகரன் ஆகியோர் மற்ற திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் உறவுளின் பங்களிப்போடு நடத்தினார்கள். இக்கூட்டத்திற்கு  நாம் தமிழர் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர்கள் செல்வம், சமரன் பாலா, பரமசிவம், கௌரிசங்கர் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முந்தைய செய்திஇன்று 25-07-11 இரவு 10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் சீமான் அவர்களின் நேர்காணல் ஒளிப்பரப்பாக இருக்கிறது
அடுத்த செய்திசேலம் மாவட்டத்தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம்