நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மண்டல ஆலோசனைக்கூட்டம் 26.01.2014 அன்று நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

31

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மண்டல ஆலோசனைக்கூட்டம் 26.01.2014 ஞாயிறு அன்று விழுப்புரம் எ.எஸ்.ஜி மகாலில் மண்டல ஒருங்கிணைப்பாளர் மா.செ.குமரேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அருண்குமார், மு.ராமகிருஷ்ணன், பெ.சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர்கள் சிவக்குமார், ரகு, செந்தமிழ், கலையரசன், புருசோத்தம்மன், ஆறுமுகம், ராமநாதன் கல்வி மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கமாக சக போராளியான ராமகிருட்டிணன் அவர்களின் தந்தைக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வருகை புரிந்த பொறுப்பாளர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு
1.    மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் பிப்ரவரி இறுதிக்குள் குறைந்தது 2000 உறுப்பினர்களை சேர்த்து கட்சியை பலப்படுத்துவது.
2.    ஒவ்வொரு ஒன்றிய நகர பகுதிகளில் 5 முதல் 10 கொடிகளையாவது ஏற்றி இருக்க வேண்டும்.
3.    சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உடனடியாக தலைமையின் மூலம் உறுப்பினர் அடையாள அட்டையை பெற்று தருதல்.
4.    மேலே கூறிய மூன்று செயல்முறைகளையும் செய்துமுடித்து விட்டு அண்ணன் அவர்களை அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை மாநாடு போன்று நடத்துதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள் உறுப்பினர் படிவத்தை பெறுவதற்கு தங்களுடைய பெயர் பட்டியலை மண்டல ஒருங்கிணைப்பாளரிடம் பதிவு செய்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியாக சி.கே.மாரியப்பன் அவர்கள் நன்றி உரை கூறினார்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் சார்பில் மொழிப்போர் ஈகிகளுக்கு (சனவரி 25) வீரவணக்கம்
அடுத்த செய்திநாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக இன்று (29.01.2014) அண்ணன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.