நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த அறிக்கை – அன்புமணி வரவேற்பு!

57

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை தாக்கல் செய்துள்ள அறிக்கையை அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.பசுமை தாயகம் அமைப்பு சார்பில் ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் நவநீதம் பிள்ளையின் அறிக்கையை வரவேற்று புதன்கிழமை அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

இலங்கைப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணை தொடர்பான ஆய்வறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அதன் தலைவரான நவநீதம் பிள்ளை தாக்கல் செய்துள்ளார்.இலங்கையில் நிலவும் சூழலைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் அந்த அறிக்கை அமைந்திருந்தது.இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கும் நடைமுறையின் ஓர் அங்கமாக உண்மை கண்டறியும் அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நவநீதம்பிள்ளையின் பரிந்துரையை மனிதஉரிமை ஆணையம் ஏற்றுள்ளது. நவநீதம்பிள்ளையின் அறிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.

இலங்கை மீது இந்தியா தவறான நம்பிக்கை வைப்பதைக் கைவிட வேண்டும்.இனப் படுகொலைகள், போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். இதற்கான தீர்மானத்தை வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்திசென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் பாரிய தீவிபத்து! – ரேடர் கருவிகள் எரிந்து நாசம்.
அடுத்த செய்திமூடப்படுகிறது பூந்தமல்லி சிறப்பு முகாம்! – அகதிகளை கும்மிடிப்பூண்டிக்கு மாற்ற நீதிமன்றம் பச்சைக்கொடி.