துரைமுருகன் பதவி விலக வேண்டும் – சீமான்

121

துரைமுருகன் பதவி விலக வேண்டும்-சீமான்

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.கோவை சட்டக் கல்லூரி பேராசிரியை தாமரைச் செல்வி என்பவர் கல்லூரி விடுதி மாணவிகளை மிகுந்த கீழ்த்தரமாக நடத்துவதோடு இந்துத்துவா உணர்வையும் அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகிறார்.மேலும் விடுதி மாணவிகளுக்கு அரசு அளிக்கும் பணத்தினை கையாடல் செய்து அவர்களுக்கான எந்த அடிப்படை வசதியுயையும் செய்து தர மறுக்கிறார்.இவர் மீது நடவடிக்கை எடுக்க பல முறை கல்லூரி நிர்வாகத்திடமும்,கல்லூரி இயக்குனரகத்திடம்  வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பேராசிரியை தாமரைச் செல்வி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் நூற்றுக் கணக்கானோர் கடந்த 13 நாட்களாக கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தனை நாள் கழித்தும் கல்லூரி நிர்வாகமும்,இயக்குனரகமும் அவர்களின் குரலுக்குத் துளியும் செவி சாய்க்கவில்லை.அதேநேரம் கல்லூரிக்குள் இருந்து போராடிவரும் மாணவர்களுக்கு உணவும், நீரும் அனுப்புவதை போலீஸ் மூலம் தடுத்து மாணவர்களைப் பட்டினி போட்டு வழிக்கு கொண்டுவர முயல்கிறது.அரசின் மாணவர் விரோதப்போக்கை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் க்ண்டிக்கிறது. நாட்டை வருங்காலத்தில் வழி நடத்தும் சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து துளியும் கவலை கொள்ளாமல் அமைச்சர் துரை முருகன் காங்கிரசுக்காரனுடன் லாவணி பாடிக் கொண்டிருக்கிறார்.அவர் மாணவர் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும்.அல்லது தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கட்சி வேலையைப் பார்க்கச் செல்ல வேண்டும். ஆகவே சட்டக் கல்லூரி இயக்குனரகம் உடனடியாக பேராசிரியை தாமரைச் செல்வியை பணி நீக்கம் செய்வதோடு மாணவ மாணவிகளுக்கு அடிப்படை வசதியுயையும் செய்து தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

முந்தைய செய்தி3000 பிள்ளைகளின் தந்தை மரணம்.
அடுத்த செய்திகடாபிக்கு மகிந்தா உற்சாகச் செய்தி – லிபிய மக்கள் பயங்கரவாதிகளாம்