தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை – தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரம்

24

தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரங்களின் படி 2009ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2008ஆம் ஆண்டில் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 2009ஆம் ஆண்டு தற்கொலை எண்ணிக்கை 1,172 அதிக்ரித்துள்ளது.

இதன் மூலம் 1997ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 2,16,500 ஆக அதிகரித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலைகளில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கார் ஆகிய 5 மாநிலங்கள் “விவசாயிகள் தற்கொலை மாநிலங்கள்” என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

2009ஆம் ஆண்டு 17,368 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது கடந்த 6 ஆண்டுகளின் மிக மோசமான நிலவரமாகும்.

இந்த 5 தற்கொலை மாநிலங்களில் 2009ஆம் ஆண்டு மட்டும் கர்நாடகாவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 545 விவசாயிகள் கூடுதலாக வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த 5 தற்கொலை மாநிலங்கள் அல்லாது தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு நிலவரத்தைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகரித்துள்ளது.

28 மாநிலங்களில் 18 மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை விகிதம் 2009ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.

1997ஆம் ஆண்டு முதல் 2003அம் ஆண்டு வரை ஆண்டொன்றுக்கு சராசரியாக 16,267 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது இந்த 7 ஆண்டுகளில் 1,13,782 விவசாயிகள் தற்கொலை புரிந்துள்ளனர்.

அடுத்த 6ஆண்டுகளில் 1,02,628 விவசாயிகள் தற்கொலை புரிந்துள்ளனர். அதாவது ஆண்டொன்றுக்கு இந்த 6 ஆண்டுகளில் சுமார் 17,100 விவசாயிகள் தற்கொலை புரிந்துள்ளனர்

நன்றி

வெப்துனியா

முந்தைய செய்திமத்திய மாநில அரசுகள் கைவிட்ட நிலையில் சிங்கள இனவெறி கடற்படையால் நேற்றும் தாக்கப்பட்ட இந்திய(?) தமிழக மீனவன்.
அடுத்த செய்திதிருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி.