நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

147

ஊடகச் செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு | நாம் தமிழர் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த, தமிழர் தேசிய விடுதலைக் கழகத் தலைவர் ஆ.கி.ஜோசப் கென்னடி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் இன்று 18-03-2019 திங்கட்கிழமை, காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை நேரில் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினர்.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழர் தேசிய விடுதலைக் கழகம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப் பேரியக்கம், மருது மக்கள் இயக்கம், இசுலாமிய சேவை சங்கம், தமிழக இளைஞர் முன்னணி, தமிழக மீனவர் முன்னணி, இஸ்லாமிய மக்கள் இயக்கம், புரட்சிகர கம்யூனிஸ்ட், இந்திய சுதந்திரா கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் கழகம், தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பேரவை, தமிழ்க இளையோர் எழுச்சிப் பாசறை, தமிழ் மீனவர் கழகம், கிருத்துவ மக்கள் மன்றம், வீரத்தமிழர் விடுதலைப் பேரவை, விடிவெள்ளி மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எதிர்வரும் ஏப்ரல் 18 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வாழ்த்துகளும் ஆதரவும் தெரிவிப்பதாகவும். தேர்தல் பணிகளில் உடன் சேர்ந்து பயணிக்கவும், பரப்புரைகளில் முழுமையாக இணைந்து தமிழ்த் தேசியத்தின் தேவையையும், நாம் தமிழர் கட்சி வெற்றிபெற வேண்டிய அவசியத்தையும் முன்வைத்து களம் நிற்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு அயராது உழைப்போம் என உறுதி கூறப்பட்டுள்ளது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
அடுத்த செய்திபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் நாம் தமிழர் மகளிர் பாசறையினர் மனு