தமிழீழ விடுதலைப்போரின் தொடர்ச்சியை யாரும் நிறுத்திவிட முடியாது: – காசியானந்தன்!

18

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முழைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார் கடும்தொனியில் காசியானந்தன்(காணொளி)

வடமாகாண தேர்தல் முடிந்து அங்கே விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இதனை பெரிதாக ஊடகர்கள் அலசி ஆய்ந்துகொண்டிருக்கின்றார்கள். அங்கிருந்து கொண்டு தமிழர்களின் விடுதலைஉணர்வினை மழுங்கடிக்கும் முயற்சியினை நாலுபக்கத்திலும் நஞ்சர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த தேர்தல் மகிந்த அரசிற்கு பெரிதும் உதவி புரிந்திருக்கின்றது மகிந்தவின் அரசு ஒருநேர்மையான அரசு ஜனநாயகத்தை மதிக்கிற அரசு ஆகவே அந்த ஜனநாயவாதியான மகிந்த போற்றுதற்குரியவர் என்று ஐ.நா மன்ற ஆணைக்குழு அவர்மீது கொடுமையான சர்வதிகாரி என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்ற நேரத்தில் அவரை ஒரு ஜனநாயகவாதியாக காட்டுகின்ற நாடகத்திற்கு இந்த மாணாசபை பயன்பட்டிருக்கின்றது.

இன்னென்று இந்த மாகாணசபையினை தமிழீழ மக்கள் வடக்கு மக்கள் ஆதரத்திருக்கின்றார்கள் தமிழர் கூட்டமைப்பினை ஆதரித்திருக்கின்றார்கள்.

தமிழர் கூட்டமைப்பினை ஏன் ஆதரித்தார்கள் என்றால் அந்த கூட்டமைப்பினை எதிர்த்து நின்ற சிங்கள ஆட்சியாளர்கள் படுதோல்வி அடையவேண்டும் என்ற நோக்கோடுதான் மக்கள் இந்த வாக்கினை அளித்திருக்கின்றார்கள்.

விக்னேஸ்வரன் போன்றவர்கள் சமஸ்டிதான் எங்கள் கொள்ளை என்று சொல்கிறார்கள் அந்த சமஸ்டிக்காக வடமாகாண மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை விக்னேஸ்வரன் புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழத்திற்காக போராடிய மக்களை ஒடுக்கிய அடக்கிவிட்டதான நினைத்த மகிந்த அரசினை தேற்கடித்து தமிழிழத்தின் மீது தமிழீழ மக்கள் உறுதியாக நிக்கின்றார்கள் என்பதற்காகவே கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

கூட்டமைப்பு ஒருவகையில் சிறுஅளவு பயன்பட்டிருக்கின்றது அது என்னவென்றால் அந்த மண்ணில் சிங்களஆட்சியாளர்களும் அவர்களின் கைகூலிகளும் அந்த மாகாணசபையில் உட்காராமல் தடுத்திருக்கின்றது அது ஒன்றைத்தான் இந்த மாகாணசபை செய்திருக்கின்றது.

மகாணசபை பயனுள்ளதா இல்லையா என்றால் முழுமையாக பயனற்றது ஆனால் உலகத்தின் பார்வையில் தமிழீழத்தின் ஒருபகுதியினை ஒருமாகாண சபையாக வருகின்றபோது அதுசிங்களவன் கையில் இல்லை என்பதை காட்ட பயன்பட்டிருக்கின்றது.

வெற்றிக்களிப்பில் விக்னேஸ்வரன் போன்றவர்கள் பேசுகின்ற பேச்சு அயோக்கியதனமான பேச்சு நாங்கள் தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று அவர் சொல்கின்றார்.அவர் எந்த தமிழீழத்தை கைவிட்டோம் என்று சொல்கின்றார் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தைசெல்வா தீர்மானம் இயற்றி நிறைவேற்றிய 27ஆண்டுகளாக சமஸ்டி கேட்டு சிங்களவனோடு இணைந்து சமஸ்டி பெறமுடியாது என்று உறுதியாக நம்பிய தந்தைசெல்வா அதே அண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றி தமிழீழ தீர்மானத்தை எதிர்த்து தமிழீழ தீர்மானத்தை கைவிட்டுவிட்;டோம் என்று சொல்கிறார்.

அந்த தமிழீழ தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டு பொது தேர்தலில் வாக்களித்து அதை வெற்றிபெற செய்தார்களே அந்த வெற்றிபெற செய்த தமிழிழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கிறார்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று காலம்முழுவதும் சொல்லி வந்த எங்கள் அரும்பெரும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கொண்டிருந்த அந்த ஈடுணையற்ற கொள்ளை தமிழீழம் அதனை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார்.

எந்த தமிழீழத்திற்காக 40ஆயிரம் வீரவிடுதலைப்புலிகள் தங்கள் உயிரைகொடுத்து மாவீரர்களாகி போனார்களே அந்த தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார் 3இலட்சம் மக்கள் செத்து மடிந்தார்களே இதுவரை அந்த தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கிறார்.

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார்.

அவருடைய சொற்பொழிவு தமிழீழ மக்களின்அடிநெஞ்சில் நெருப்பு வைக்கின்றது தமிழீழ மக்களின் உணர்வு பற்றி எரிகிறது அவர் மறந்துவிடகூடாது அவர் தெளிவாக சொல்லவேண்டும் ஒன்று பட்டஇலங்கைக்குள் நாங்கள் சிக்கலை தீர்ப்போம் என்று சொல்கிறார் சிங்கள சிறீலங்காவின் சட்டதிட்டங்களுக்கு அமைய எங்களின் போராட்டங்கள் அமையும் என்கிறார் நான் இவரைபார்த்து கேட்கிறேன் போராடுங்கள் உங்களால் முடியுமா? காந்தியடிகள் பிரிட்டிஸ்காரனின் சட்டதிட்டங்களுகமையதான் இந்தியாவில் அறபோராட்டங்கள் நடத்தினார் இது உங்களால் முடியுமா?

ஏதாவது ஒரு மேடையில் விக்னேஸ்வரன் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா?

விக்னேஸ்வரனோ சம்மந்தனோ துணிச்சலான ஒருமேடையில் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா இன்னிலையில் இவர்கள் சமஸ்டி பேசுகின்றார்கள்.

வேதாளம் பளையபடி முருங்கைமரத்தில் ஏறுகின்றார்கள் தமிழ் நாட்டுமக்கள் விக்னேஸ்வரனை விட போரடிக்கொண்டிருக்கின்றார்கள் தமிழக முதல்வர் ஜெயலிதா தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள் தமிழீழத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து கூட்டமைப்பை விட அதிகமாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் நெருப்பு விட்டு எரியும் தமிழீழ விடுதலை உணர்வினை அணைக்கவேண்டும் என்று நினைக்கிறார் விக்னேஸ்வரன்.அது அணையாது உலகத்தில் நீங்கள் மட்டும்தான் தமிழீழத்திற்காக இருக்கின்றீர்கள் என்று நினைக்காதீர்கள் தமிழீழத்தில் தமிழீழமா சமஸ்டியா என்று ஒருதேர்தல் நடத்தமுடியுமா அப்பொழுது பாருங்கள் மக்கள் உங்கள் முகத்தில் செருப்பால் அடிப்பார்கள்.

இவ்வாறான சின்னத்தனமான முயற்சிகளில் இறங்காதீர்கள் என்று விக்னேஸ்வரனை பார்த்து பணிவாக கேட்டுக்கொள்கின்றேன் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திமுடிந்தால் இராணுவத்தையும் ஆளுநரையும் வெளியேற்றிப் பாருங்கள்: விக்னேஸ்வரனுக்கு விமல் சவால்!
அடுத்த செய்திகூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகளை அவதானித்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொது பல சேனா